பள்ளிக்கூட நாட்கள்
பசுமையான நினைவுகள்
பிரிய முடியாத தோழர்கள்
பின்னிப் பிணைந்த நினைவுகள்
பாடசாலை வாழ்க்கை
பாகற்காய் போல் கசக்கிறதென்றோம்
பணம் சம்பாதிக்கும்
பகட்டு வாழ்க்கை நல்லதென்றோம்
ஆசிரியர்கள் ஹிட்லராய் தோன்றினர்
ஆலோசனைகள் வெறுப்பேற்றின
அழகிய பாடங்களை
அறவே வெறுத்தோம்
![]() |
(Image copyrights reserved to respective owners only) |
பதின்மூன்று வருடங்கள்
பல்வேறு ஆசிரியர்கள்
அழகான வாழ்க்கை
அன்பான நண்பர்கள்
அத்தனையும் கசந்தது அன்று
அதன் அருமை புரிகிறது இன்று
பள்ளிக்கூட வாழ்க்கை அழகானது
போலித்தன்மை இல்லாதது
மாணவர்களே உணருங்கள்
மனக்கதவை திறவுங்கள்
பணமீட்டும் வாழ்க்கை வேண்டாம்
பள்ளிக்கூட வாழ்க்கையே போதும்!