Wednesday, April 28, 2021

பசுமை நிறைந்த நினைவுகளே...!

பள்ளிக்கூட நாட்கள் 

பசுமையான நினைவுகள் 

பிரிய முடியாத தோழர்கள் 

பின்னிப் பிணைந்த நினைவுகள் 


பாடசாலை வாழ்க்கை 

பாகற்காய் போல் கசக்கிறதென்றோம் 

பணம் சம்பாதிக்கும் 

பகட்டு வாழ்க்கை நல்லதென்றோம் 


ஆசிரியர்கள் ஹிட்லராய் தோன்றினர் 

ஆலோசனைகள் வெறுப்பேற்றின 

அழகிய பாடங்களை 

அறவே வெறுத்தோம் 


(Image copyrights reserved to respective owners only)



பதின்மூன்று வருடங்கள் 

பல்வேறு ஆசிரியர்கள் 

அழகான வாழ்க்கை 

அன்பான நண்பர்கள் 


அத்தனையும் கசந்தது அன்று 

அதன் அருமை புரிகிறது இன்று 

பள்ளிக்கூட வாழ்க்கை அழகானது 

போலித்தன்மை இல்லாதது 


மாணவர்களே உணருங்கள் 

மனக்கதவை திறவுங்கள் 

பணமீட்டும் வாழ்க்கை வேண்டாம் 

பள்ளிக்கூட வாழ்க்கையே போதும்!

No comments:

Post a Comment

விழிப்புணர்வு

முகக் கவசம் அணியா  மூடர்களுக்கும்  கைகளைக் கழுவாத  கயவர்களுக்கும்  குளிக்க மறந்த  குற்றவாளிகளுக்கும்  பொதுவில் தும்மிய  பொல்லாதவர்களுக்கும் ...