Wednesday, November 20, 2024

தனிமையான ஒரு நாள்...!

காலையில் இருந்து 

தனிமையில் இருக்கி​றேன் 

பேஸ்புக் பார்த்தேன் 

சில காணொளிகள் 

கொஞ்சம் தொலைக்காட்சி 

கொஞ்சம் மடிக்கணினி 

நிறைய சிந்தனைகள் 

இப்படித்தான் 

இருக்கிறது எனது நாள் 


இசைப்புயலுக்கு விவாகரத்தாம் 

அன்பு 

கூடிவிட்டதா

அல்லது

நீர்த்துப் போய்விட்டதா?

என்னவாக இருக்கும்? 

விவகாரம் தனிப்பட்டது தான்

பிரிந்தது மனிதர்கள் தானே?

நா​ளை நாம் கவனமாக இருக்க

இன்று காரணம் 

அறிவது ​​தேவை அல்லவா?


என்னைப் போல 

மனைவியை திட்டியிருப்பாரா?

அன்புகாட்டநேரமில்லாமல் 

அலைந்திருப்பாரா?

என்னவாக இருக்கும்?


இருபத்து ஒன்பது வருடங்கள்

இணைந்த வாழ்க்கை 

​தொன்னூற்றொன்பதில் 

ஆட்டமிழந்த 

சச்சினைப் போல 

அவரைப் பார்க்கறேன் நான்

ஏன் ரஹ்மான்? 

சொல்ல மாட்டீர்களா? 


என்​னைப்போல 

​மனைவி​​​யை வேலைக்குப் 

போகச்​சொன்னீர்களா? 

சமையலுக்கு உதவி 

செய்யவில்லையா?

கெட்ட வார்த்தையில் திட்டினீர்களா?

சொல்ல மாட்டீர்களா ரஹ்மான்? 


சரி அதை விடுங்கள். 

இத்தனை ஆண்டுகளும் 

இனிமையாக வாழ்ந்தீர்கள் அல்லவா? 

அல்லது 

என்னைப் போல 

வாய் வார்த்தைக்காக 

வாழ்ந்தேன் என்று சொன்னீர்களா?

பட்டாடை உடுத்தினாலும் 

பம்பரமாய் சுற்றினாலும் 

நீங்களும் 

சராசரி மனிதர்தானா?

சொல்வீர்களா ரஹ்மான்? 


மன்னித்து விடுங்கள்! 

உங்களிடம் 

அடுக்கடுக்காக இத்தன கேள்விகள் கேட்டது 

அநாகரீகம் தான். 

அத்தனையும் உங்கள் 

அந்தரங்கம் தான். 

அதை நான் மதிக்கிறேன். 

ஆனால், 


சகித்துக் கொண்டு வாழும் 

சராசரி வாழ்க்கை 

சரிதானா 

என்று தெரிய வேண்டும் 

எனக்கு. 

என் தராசுக்கு 

எடைக்கல்லாகத் தான் 

எழுமாற்றாக வினாக்களை 

எழுப்பினேன். 

தவறுதான். 

மன்னித்துவிடுங்கள் 


Image Credit - Freepik website (www.freepik.com)



என் விடுமுறை நாளில் 

அவளுக்கு வேலை

நான் காலையில் இருந்து 

தனியாக நேரத்தைக் 

கடத்த வேண்டும் 

அவளது விடுமுறை நாளில் 

நான் வேலை 

பாதிநாளில் 

பணிக்குக் கிளம்ப வேண்டும் 


அவளை நான் 

கொஞ்சுவதில்லை

அவள் 

என்னைக் 

கெஞ்சுவதில்லை. 

எது அலுவலகம் 

எது வீடு 

என்று 

வித்தியாசம் தெரியாமல் 

ஏன் இரவு பகலாக 

உழைக்கிறோம் 

என்றே புரியாமல் 

ஓடிக் கொண்டிருக்கிறோம் 

இருவரும். 


என் வாழ்க்கை வேறு 

உங்கள் வாழ்க்கை வேறு 

இரண்டையும் ஒப்பிடுவது 

கடலையும்

குட்டையையும் 

ஒப்பிடுவதைப் போல

ஆனால் 

மனதைத் 

தேற்றிக் கொள்ளலாம் பாருங்கள்! 


நமக்கென்று 

பிரத்தியேகமான உறவுகள் 

எதுவும் 

இல்லாத தருணங்கள் 

கொடுமையானவை 

சண்டை போட்டாலும் 

தேடுவதற்கு ஒருவர் 

இருக்க வேண்டும் 

இதனால்தான் 

நாங்கள் 

சகித்துக் கொண்டு வாழ்கிறோம் 


காலையில் இருந்து 

நான் தனியாகத்தான் இருக்கிறேன்

அவள் வந்து 

சண்டை போடுவாளா 

அல்லது 

முத்தமிடுவாளா என்று 

தெரியாது

ஆனால் 

கூட இருப்பாள்

சகித்துக் கொண்டேனும். 


இணைவதை விட 

பிரிவது கடினம் 

அதற்குத் தான் 

அதிக மன வலிமை தேவை! 

எல்லாமுமாக இருந்து

யாரோவாக மாற 

எனக்கு தைரியமும் இல்லை

அதற்கு வலிமையும் கிடையாது

ஆனால் 

நானும் ஓர்நாள் பிரியலாம்

அது நிகழும்போது நிகழட்டும் 

அதுவரை 

சகித்திருப்பேன் 

சேர்ந்திருப்பேன் 

என்னவளோடு...! 


2024.11.20

03.00 PM 

Sunday, May 2, 2021

விழிப்புணர்வு

முகக் கவசம் அணியா 

மூடர்களுக்கும் 

கைகளைக் கழுவாத 

கயவர்களுக்கும் 

குளிக்க மறந்த 

குற்றவாளிகளுக்கும் 

பொதுவில் தும்மிய 

பொல்லாதவர்களுக்கும்

கொரோனாவை அலட்சியப்படுத்தும் 

கொடுங்கோலர்களுக்கும் 


Image copyrights reserved to respective owners only



தேவை 

விழிப்புணர்வு!

Wednesday, April 28, 2021

பசுமை நிறைந்த நினைவுகளே...!

பள்ளிக்கூட நாட்கள் 

பசுமையான நினைவுகள் 

பிரிய முடியாத தோழர்கள் 

பின்னிப் பிணைந்த நினைவுகள் 


பாடசாலை வாழ்க்கை 

பாகற்காய் போல் கசக்கிறதென்றோம் 

பணம் சம்பாதிக்கும் 

பகட்டு வாழ்க்கை நல்லதென்றோம் 


ஆசிரியர்கள் ஹிட்லராய் தோன்றினர் 

ஆலோசனைகள் வெறுப்பேற்றின 

அழகிய பாடங்களை 

அறவே வெறுத்தோம் 


(Image copyrights reserved to respective owners only)



பதின்மூன்று வருடங்கள் 

பல்வேறு ஆசிரியர்கள் 

அழகான வாழ்க்கை 

அன்பான நண்பர்கள் 


அத்தனையும் கசந்தது அன்று 

அதன் அருமை புரிகிறது இன்று 

பள்ளிக்கூட வாழ்க்கை அழகானது 

போலித்தன்மை இல்லாதது 


மாணவர்களே உணருங்கள் 

மனக்கதவை திறவுங்கள் 

பணமீட்டும் வாழ்க்கை வேண்டாம் 

பள்ளிக்கூட வாழ்க்கையே போதும்!

Monday, April 26, 2021

நலமாய் வாழ முருங்கை

 எல்லா இடத்திலும் வளரும் 

எல்லோருக்கும் பயன் தரும் 

எல்லோருக்கும் பிடித்தது

எங்கள் உடலுக்கு ஏற்றது 


ரசம் வைத்து உண்ணலாம் 

குழம்பு வைத்து ருசிக்கலாம் 

இலையைச் சுண்டி உண்ணலாம் 

இது இரத்தத்திற்கு நல்லதாம் 


நன்மை பல கொண்டது 

நம் வீட்டில் வளர்க்க ஏற்றது 

நிலமெங்கும் பயிரிடுவோம் 

நலமாய் வாழ முருங்கை 


(Image copyrights reserved to respective owners only)


இறை வணக்கம்

மொழியின் முதல்வன்

முதலின் தலைவன் 

மனிதனைப் படைத்தவன்

மனங்களை அறிந்தவன் 


அன்பின் உருவம் 

அறியாமையின் ஒளி 

அறிவின் வழிகாட்டி 

அமைதியின் உருவம் 


எல்லாம் அறிந்தவன் 

என்னையும் புரிந்தவன் 

எப்போதும் நிலையானவன் 

எங்கும் நிறைந்தவன் 


அறத்தின் அரசனே 

அருவத்தின் உருவமே 

ஆக்கத்தை ஆரம்பிக்க 

அருள் புரிவாய் நேசனே!


Image copyrights reserved to respective owners only


காலங்கள் மாறும்

மாற்றம் ஒன்று தானே 

இந்த உலகத்தில் மாறாதது? 

என் 

உருவம் 

எண்ணங்கள் 

இன்பம் 

துன்பம் 

எதிர்பார்ப்புகள் 

இலக்குகள் 

என 

எல்லாமே 

மாறியிருக்கிறது 

ஆதலால் 

நான் 

இன்று சந்தித்திருக்கும் 

நெருக்கடியான 

காலங்களும் 

ஒருநாள் நிச்சயம் 

மாறும்!


Image copyrights reserved to respective owners only


Saturday, April 24, 2021

அழகாகும் என் நாட்கள்

என்னைச் சுற்றி இயற்கை 

அதற்குள் ஒரு ஓலைக் குடிசை 

இரசாயனமில்லா உணவு 

இதமான காற்று 


இரவு படுத்தவுடன் உறக்கம் 

இதயமறிந்த காதலி 

இலக்கியம் பேசும் நண்பர்கள் 

இனிக்கும் தண்ணீர் 


(Image Copyrights reserved to respective owners only)



அறிவு வளர்க்கும் நூல்கள் 

அழகான குழந்தை 

கதை சொல்லும் பாட்டி 

பாட்டியின் வடையைத் திருட 

ஒரு காக்கை 


உடலுக்கேற்ற உழைப்பு

உழைப்புக்கேற்ற ஊதியம் 

உயிரான உறவுகள் அந்த 

உறவுகளின் அழகான நினைவுகள் 


தேவைக்கு மருத்துவம் 

ஆசைக்கு விளையாட்டு 

தேவைக்கு பணம் 

அளவான செலவு 


இவையெல்லாம் இருந்தால் 

அழகாகும் என் நாட்கள் 

தனிமையான ஒரு நாள்...!

காலையில் இருந்து  தனிமையில் இருக்கி​றேன்  பேஸ்புக் பார்த்தேன்  சில காணொளிகள்  கொஞ்சம் தொலைக்காட்சி  கொஞ்சம் மடிக்கணினி  நிறைய சிந்தனைகள்  இப...